முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 14, 2015

சத்திரக்குடி கோவில் கும்பாபிஷேக விழா!!

No comments :
சத்திரக்குடி சேதுபதி விவேகானந்தபுரத்தில் உள்ள இருளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 11-ந்தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து 12-ந்தேதி காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, துர்க்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8 மணிக்கு கோமாதா , லட்சுமி பூஜையை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி அரண்மனை சிவன் கோவில் மனோகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.


விழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

செய்தி: தினத்தந்தி

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
சிறுபான்மையின மாணவர்கள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்1, பிளஸ் 2, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டய, பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 

www.scholarships.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு புதிய இனங்களுக்கு செப்.15 மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு அக்.10வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18ஆயிரத்து 989 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித் தொகை 2015-16-ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்று, மதத்திற்கான சான்று, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண், வங்கி ஐஎப்எஸ் எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். பயிலும் கல்வி நிலையங்களில் செப்.15க்குள் புதியதற்கும் அக்.10க்குள் புதுப்பித்தலுக்கும் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் செலவில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு!!

No comments :
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேவர் பிளாக் சாலையை மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

 ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தின் உள்புறத்தில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்நிதியிலிருந்து கால்வாய் அமைத்து மழைநீர் சேமிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பேவர் பிளாக் சாலையையும், பிற வளர்ச்சிப் பணிகளையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

 அப்போது ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ்.சந்தானலெட்சுமி, மருத்துவமனை கணகாணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலர் சாதிக்அலி, பட்டினம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா மருது, மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர் கே.சி.வரதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் உடன் வந்திருந்தனர். பின்னர் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா கூறியதாவது: தற்போது மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் ரூ.40 லட்சம் செலவில் தரமான பேவர் பிளாக் சாலை மீதமுள்ள இடங்களிலும் போடப்படும். 100 படுக்கைகள் கொண்ட பிரிவு ஒன்றும் ஒப்பந்த காலத்துக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்டு, அதில் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட குளிரூட்டும் வசதியுடன் தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 இவை தவிர மேலும் பல சிறப்பு பிரிவுகளுக்கான புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் 2016 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

செய்தி: தினமணி

QATAR DUTY FREE வேலை வாய்ப்புகள்!!

No comments :
Qatar Duty Free Career Opportunities :
Job Title :

QR8513 - Boutique Supervisor (Al Mutahajibah) |Qatar Duty Free | Doha
QR8514 - Boutique Supervisor (Victoria Secret) | Qatar Duty Free | Doha
QR8505 - Assistant Merchandiser | Qatar Duty Free | Doha
QR8506 - Duty Manager (Retail) | Qatar Duty Free | Doha
QR8508 - Shop Team Leader (Retail) | Qatar Duty Free | Doha
QR8484 - Duty Manager F&B | Qatar Duty Free | Doha
QR8510 - Visual Merchandiser | Qatar Duty Free | Doha
QR8511 - Shop Supervisor | Qatar Duty Free | Doha
QR8458 - Commis Chef | Qatar Duty Free | Doha
QR8461 - Junior Sous Chef | Qatar Duty Free | Doha
QR8470 - Sanitation Team Leader | Qatar Duty Free | Doha
QR8456 - Porter (Bus Boy) - F&B | Qatar Duty Free | Doha
QR8503 - Sales Assistant | Qatar Duty Free | Doha
QR8504 - Merchandiser | Qatar Duty Free | Doha
QR8459 - F&B Supervisor | Qatar Duty Free | Doha
QR8460 - Bar and Restaurant Supervisor| Qatar Duty Free| Doha
QR8509 - Food Server | Qatar Duty Free | Doha
QR8467 - Sanitation Supervisor | Qatar Duty Free | Doha
QR8507 - Maintenance Technician F&B | Qatar Duty Free | Doha
QR8485 - Team Leader (Restaurant) | Qatar Duty Free| Doha
QR8473 - Training Specialist - Food and Beverage | Qatar Duty Free | Doha
QR8462 - Junior Category Manager (Luxury Fashion) | Qatar Duty Free | Qatar
QR8259 - Manager Safety & Security (Retail) | Qatar Duty Free | Doha
QR7830 - Safety Supervisor (Retail) | Qatar Duty Free | Doha
QR8316 - Lead Business Process Re-engineering Analyst | Qatar Duty Free | Doha
QR8260 - Category Manager ( Toys & Souvenirs) | Qatar Duty Free | Qatar
QR8267 - Manager Merchandise Planning
QR8272 - Training Officer – F & B | Qatar Duty Free Company | Doha
QR5161 - Loss Prevention Specialist (Retail) | Qatar Duty Free | Doha
QR6958 - Retail Floor Manager | Qatar Duty Free | Doha

TO APPLY: CLICK HERE