முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 16, 2015

கீழக்கரை தாலுகா தற்காலிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திரு. அன்வர் ராஜா MP!!

No comments :
கீழக்கரை தாலுகா தற்காலிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திரு. அன்வர் ராஜா MP.

நிகழ்ச்சியில், நகர்மன்றத்தலைவி, திருமதி.ராபியத்துல் காதிரிய்யா, தாசில்தார் திருமதி.கம்லாபாய் மற்றும் நக்ர்மன்ற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





திரு.யாசீன், திரு.இம்பால ஹுசை, திரு.இம்பாலா சுல்தான் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை


படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு!!

No comments :
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வரவேண்டும்.




10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவெண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். ஜூலை 15 முதல் ஜூலை 29 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

தங்கச்சிமடம் தேவாலயத் திருவிழா!!

No comments :
ராமேசுவரத்தில் அமைந்துள்ள பழமையான புனித சந்தியாகப்பர் தேவாலயத் திருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியிலுள்ளது புனித சந்தியாகப்பர் தேவாலயம்.
இதன் 473 ஆவது ஆண்டு திருவிழா, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி பூஜைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில், தினமும் திருப்பலி பூஜைகளும், நற்கருணை, ஆராதனைகளும், பிரார்த்தனைக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.


 விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவான வரும் 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் சந்தியாகப்பர், தெரசம்மாள், செபஸ்தியார் சிலைகள் வைக்கப்பட்டு, தேவாலய வளாகத்தைச் சுற்றி தேர்ப்பவனி நடைபெறவுள்ளது. 

இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்பதால், குடிநீர் வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக, விழாக் குழுவைச் சேர்ந்த ராஜஜெகன் தெரிவித்தார்.

செய்தி: தினமணி


ஸ்பைஸ்ஜெட் விமான டிக்கெட் 1 ரூபாய் விலையில் விற்பனை!!

No comments :

மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 1 லட்சம் டிக்கெட்களை 1 ரூபாய் என்ற சலுகை விலையில் விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச்சலுகையைப் பெற விமானப் பயணிகள் தங்களது பயணத்தை ஜூலை 15, 2015 முதல் மார்ச் 31,2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முடிவு செய்ய வேண்டும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டும் வகையில் அதிகப் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்-களை வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமடையச் செய்யவும், அதிகளவில் பதிவிறக்கம் செய்யத் திட்டமிட்டே 1 ரூபாய் சலுகையை அறிவித்துள்ளது.



இச்சலுகையில் அறிவிக்கப்பட்ட 1,00,000 டிக்கெட்டுகள் அடுத்த 3 நாட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. 1 ரூபாய் சலுகை என்பது, வரி மற்றும் கட்டணங்கள் இல்லாமல் அளிக்கப்படும் கட்டணம்.


மேலும் 1 ரூபாய் சலுகை பெற பயணிகள் இரு வழிசேவையில் டிக்கெட்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் கட்டண சலுகை ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும்.

நிதி நெக்கடி பிரச்சனையில் இருந்து வெளிவரப் போராடும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு இத்தகைய சலுகை விற்பனை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சஞ்சீவ் கபூர், "நிறுவனத்தில் நிதி நெருக்கடி பிரச்சனை எதுமில்லை, இச்சலுகை மொபைல் ஆப்பை பிரபலப்படுத்த மட்டுமே அளித்துள்ளது. இதனால் நிறுவனத்திற்க நஷ்டம் ஏதும் வராது" எனத் தெரிவித்தார். இவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார்.

இச்சலுகையில் விற்பனை செய்யப்படும் டிக்கெடுகளின் கட்டணங்கள் திரும்பப்பெற இயலாது இதை மனதில் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

செய்தி: ஒன் இண்டியா