முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Friday, July 24, 2015

கீழக்கரை திமுக தலைமை கழக ஆய்வு கூட்டம் - படங்கள்!!

No comments :
கீழக்கரையில் இன்று திமுக தலைமைக்கழக ஆய்வு கூட்டம் நடந்தது.

திமுக மாநில விவசாய அணி இணை செயலாளரான திரு. பார் இளங்கோவன் கலந்து கொண்டு கீழக்கரை நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தினார்.


மாவட்ட செயலாளர் திரு.சு.ப. திவாகர் முன்னிலையில், நகர் திமுக தலைவர் மற்றும் முன்னாள் நகர் மன்றத்தலைவர் திரு. SAH பஷீர், திரு ஜமால், திரு.கென்னடி, மாணவர் அணி செயலாளர் திரு.முஹம்மது சுஐபு உள்ளிட்ட ஏராளமான திமுக வினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருப்பது குறித்தும், அதிமுக ஆட்சியின் முறைகேடுகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

செய்தி: திரு.முஹம்மது சுஐபு, திமுக மாணவர் அணி செயலாளர்