முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 27, 2015

ராமநாதபுர மாவட்டத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்வு!!

No comments :
ராமநாதபுரத்தில் நடந்த எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வில் 27 பேர் தேர்ச்சி பெற்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு மே 23, 24 தேதிகளில் நடந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான முடிவுகளின் படி ராமநாதபுரத்தில் 8 பெண் உள்பட 27 பேர் தேர்வாகியுள்ளனர்.


ராமநாதபுரம் சப் டிவிஷனில் 4,
முதுகுளத்தூர், கீழக்கரையில் தலா 6,
கமுதி, திருவாடானையில் 2,
பரமக்குடி சப் டிவிஷன், ஆயுதப்படை, கமுதி அதிரடிப்படை, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம், நெடுஞ்சாலை ரோந்து பிரிவுகளில் தலா ஒருவர் தேர்ச்சி பெற்றனர்.

பொதுப்பிரிவில் 5 பேரும், விளையாட்டு பிரிவில் 2 பேரும், போலீஸ் ஒதுக்கீட்டில் 20 பேரும் இடம் பிடித்தனர்.

செய்தி: தினசரிகள்

வெற்றி பெற்றவர்களுக்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள்.

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!!

No comments :
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பிற்கு புத்தக நிதி, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் கல்வி, உடற்கல்வி பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பத்திற்கு
செயலாளர்,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,
த.பெ.எண் 718,
தேனாம்பேட்டை,
சென்னை 8


என்ற முகவரிக்கு சுய முகவரியிட்ட தபால் தலை ஒட்டிய உறையுடன் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப அக்டோபர் 31 கடைசி நாள் ஆகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் 9525 பங்கு கொண்டனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-2 தேர்வை 9525 பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 1241 காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் குரூப்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12,079 பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர். இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 1433 பேரும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 1121 பேரும் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து மீதம் உள்ள 9525 பேர் இந்தத் தேர்வை எழுதினர். மாவட்டம் முழுவதும் 38 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி அக்பர்அலி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பதற்றமான மையமாக கருதப்பட்டு அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
தேர்வு நடைபெறுவதை 6 பறக்கும் படையினரும், 9 நடமாடும் படையினரும் தீவிரமாக கண்காணித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்தி: தினசரிகள்