முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 2, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஆக., 3) எஸ்.ஐ., பணிக்கான உடல் தகுதி தேர்வு!!

No comments :
ராமநாதபுரம், சிவகங்கையில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வில் தேறியோருக்கு நாளை (ஆக., 3) உடல் தகுதி தேர்வு துவங்குகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு பொது பிரிவினருக்கு மே 23லும், போலீசில் பணியபுரிவோருக்கு (20 சதவீத ஒதுக்கீடு) மே 24லும் நடந்தது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான தேர்வு முடிவுகள் படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பிரிவில் 142 ஆண்கள், 42 பெண்கள், போலீசில் புணிபுரிவோரில் 14 ஆண்கள், 34 பெண்கள் என 232 பேர் தேர்ச்சி அடைந்தனர்.


இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஆக., 3) துவங்கி ஆக., 5 வரை நடக்க உள்ளது. நிர்ணயிக்கப் பட்ட உயரத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 2 செ.மீ., விலக்கு அளிக்கப் படுகிறது. ஆண்களுக்கு மார்பளவு கணக்கிடப்படுகிறது. 1,500 மீ., ஓட்டம், உயரம் அல்லது நீளம் தாண்டுதல், கயறு ஏறுதல், பெண்களுக்கு பந்தெறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

3 நாட்கள் நடைபெறவுள்ள இத்தேர்வை ஐ.ஜி., அபய்குமார் சிங், டி.ஐ.ஜி (பொறுப்பு) அறிவுச்செல்வம், எஸ்.பி., மயில்வாகனன் கண்காணிக்கின்றனர்.

செய்தி: தினசரிகள்