முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 11, 2015

முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் கல்வி உதவித்தொகை, விண்ணப்பிக்க கடைசி நாள் 30.9.2015!!

No comments :
முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம்  பொருளாதார வசதியில் தாழ்ந்த நிலையிலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்விக்காக உதவித் தொகை வழங்குகிறது.


உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.


உதவித் தொகை வழங்கப்படும் துறைகள்:

மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, M.C.A. டிப்ளமோ.

விண்ணப்பம் பதிவிறக்க:

இங்கு க்ளிக் செய்யவும்


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு கீழ்க்கண்டவற்றையும் இணைத்து MEPCOT (Labbaik Educational Trust) முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை:
1.விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படம்
2.கல்லூரியில் சேர்ந்ததற்கான சான்றிதழ்
3.மதிப்பெண் பட்டியலின் நகல்கள்
4.ஜமாஅத் சான்றிதழ்
5.உடல் ஊனமுற்றோர், பெற்றோரை இழந்தவர்கள், பெற்றோர் பள்ளிவாசலில் பணிபுரிபவராயிருந்தால் அதற்குரிய அத்தாட்சிகளை இணைக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 30.9.2015

MEPCOT
Labbaik Educational Trust, P.o. Box. 3,
Thirumangalam – 625 706, Tamil Nadu.



ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.19.37 கோடி மானியம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.19.37 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ்  தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது  மேலாளர்(பொ) கயாஸ், சிவகங்கை சிட்கோ  கிளை மேலாளர் ராஜாராம், ஆகியோர் முகாம் குறித்து விளக்கினர்.



ராமநாதபுரம்  கலெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியதாவது: 


ராமநாதபுரம் மாவட்டத்தில் பின் தங்கிய கமுதியில்  ரூ.4 ஆயிரத்து 536 கோடி மதிப்பில் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம்  உற்பத்தி திட்டம், சுற்றுலாவை மேம்படுத்த தனுஷ்கோடிக்கு ரூ. 50 கோடியில்  சாலை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் தொடங்க  மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மாவட்ட தொழில் மையம்  மூலம் நடப்பாண்டில் புதிய தொழில்கள் தொடங்கிட ரூ.19.37 கோடி திட்ட மானியம்  வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மிளகாய் குழுமத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு  தொழில்கள் மேற்கொள்ள ரூ.22.41 கோடி மானியம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.  அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி தொழில் தொடங்குவதற்கு தொழில் முனைவோர்கள்  முன்வர வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முகாமில் அன்வர்ராஜா எம்.பி., முருகன்  எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு நிலவள  வங்கித் தலைவர் தர்மர், ராமநாதபுரம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களின் சங்கத் தலைவர் பாண்டியன், கனரா வங்கி மேலாளர் காந்தி மற்றும்  தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். 

செய்தி: தினகரன்

மதுவுக்கு எதிராக ராமநாதபுரம் அரண்மனை முன் திமுக போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை முன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. குருவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தலைமைச் செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், நகர் செயலர் கார்மேகம், கீழக்கரை திமுக நகர் தலைவர் திரு. பஷீர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மதுவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.