முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 20, 2015

மல்லல் ஊராட்சி களக்குடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு

1 comment :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லல் ஊராட்சி களக்குடி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , மல்லல் ஊராட்சி களக்குடி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக நிழற்குடை புதிய கட்டடம் கட்டுதல் பணிகளுக்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2015 - 2016 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 3.00 ( மூன்று லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

குவைத்-ல் நாளை ஆகஸ்ட் 21ம் தேதி புனித ஹஜ் வழியனுப்பு நிகழ்ச்சி!!

No comments :
குவைத்-ல் நாளை ஆகஸ்ட் 21ம் தேதி புனித ஹஜ் வழியனுப்பு நிகழ்ச்சி!!


ரூ.25,000க்கு மேற்பட்ட ரொக்கம், எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா டிவிக்களை சுங்க உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட வேண்டும்!!

No comments :
வெளிநாட்டில் இருந்து இனி ரூ.25,000க்கு மேற்பட்ட ரொக்கம், எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா டிவிக்களை கொண்டு வந்தால், அவற்றை சுங்க உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட வேண்டுமென்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, சுங்க வரியில்லா சிகரெட் அளவு 50 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் சுங்க சரக்கு அறிவிப்பு ஒழுங்கு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்து நேற்று வெளியிட்டது. அதன்படி, விமானத்தில் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் ரூ.25,000க்கு மேற்பட்ட கரன்சிகளையோ, எல்சிடி, எல்இடி, பிளாஸ்மா உள்ளிட்ட டிவி பொருட்களையோ கொண்டு வந்தால், அது பற்றி சுங்க உறுதிமொழி படிவத்தில் இனி குறிப்பிட வேண்டும். இதற்காக, சுங்க உறுதிமொழி படிவத்தில் புதிய வரிசை சேர்க்கப்பட உள்ளது.


தற்போதுள்ள படிவத்தில் வரி செலுத்திய பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றி மட்டுமே குறிப்பிடும் படியாக உள்ளது. ரூ.10,000க்கும் மேற்பட்ட பணம் கொண்டு வருகிறீர்களா, 5000 அமெரிக்க டாலருக்கு மேற்பட்ட தொகையை கொண்டு வருகிறீர்களா, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான தங்கத்தை கொண்டு வருகிறீர்களா, கறி, கறி தொடர்பான பொருட்கள், பால் பொருட்கள், தாவரம், விதைகள் கொண்டு வருகிறீர்களா உள்ளிட்ட கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இவற்றில் தற்போது டிவி தொடர்பான கேள்விகளும் இடம் பெற உள்ளன. சுங்க வரி உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதே போல, சீனா, நேபாளம், பூடான், மியான்மர் தவிர மற்ற நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மற்றும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் 10 ஆண்டாக தங்கியவர்களாக இருந்தால் ரூ.45,000 மதிப்பிலான சரக்குகளை எடுத்து வரலாம். முன்பு இந்த கட்டுப்பாடு ரூ.35,000 ஆக இருந்தது.

புதிய விதிமுறைப்படி, வரியில்லா சிகரெட்டின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 200 சிகரெட், 50 சிகார் மற்றும் 250 கிராம் புகையிலை பொருட்களை வரியில்லாமல் எடுத்து வரலாம். இது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இனி, 100 சிகரெட், 25 சிகார், 150 கிராம் புகையிலை பொருட்களுக்கு மட்டுமே வரி கிடையாது. அதற்கு மேற்கொண்டு வந்தால் வரி விதிக்கப்படும். இதுதவிர, பயணிகள் கடைசியாக 6 நாட்களில் எந்தெந்த நாட்டுக்கு சென்றனர், அவர்களின் பாஸ்போர்ட் எண்ணையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

செய்தி: தினகரன்

இந்திய தூதரகம் ஹஜ் பயணிகளுக்கு வாட்ஸ் அப் எண் வெளியிட்டுள்ளது!!

No comments :
இந்திய தூதரகம் ஹஜ் பயணிகளுக்கு வாட்ஸ் அப் எண் வெளியிட்டுள்ளது.
தகவல்கள் மற்றும் புகார்களுக்கு தொடர்பு கொள்ள
வாட்ஸ் அப் எண் +966 543 891 481


இலவச அழைப்புக்கு (சவுதியில் உள்ளவர்களுக்கு மட்டும்) :
800 2477 786

கூட்டநெரிசலில் தொலைந்து போனால் உங்கள் இருப்பிடத்தை மற்றவர்கள் கண்டறிய இந்தியத்தூதரகத்தின் இருப்பிடம் அறியும் மென்பொருள்.
Android App – Accommodation Locator :https://play.google.com/store/apps/details…

தகவல்: திரு. அஹமது இம்தியாஸ், சவூதி அரேபியா