Tuesday, August 25, 2015
ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம், ட்ரான்ஸ்ஃபரை ரத்து செய்ய வலியுறுத்தல்!!
மூன்று விஏஓக்களை கோட்டம்விட்டு கோட்டம்
மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி விஏஓக்கள் ராமநாதபுரத்தில் உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்களை(விஏஓ) பழிவாங்கும்
நோக்கத்தோடு செயல்படுவதாக, ராமநாதபுரம் மாவட்ட
நிர்வாகத்தை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு விஏஓ.,க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாலையா தலைமை வகித்தார். மாவட்டச்
செயலாளர் வீராச்சாமி, பொருளாளர்
பாலகிருஷ்ணன், கோட்டச் செயலாளர்
தர்மர், மாவட்ட செய்தி
தொடர்பாளர் சைபுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி விஏஓ நல்லமருது, இளஞ்செம்பூர் விஏஓ ஐயப்பன், கீழத்தூவல் விஏஓ தினேஷ்பிரபு ஆகியோர் பரமக்குடி கோட்டத்திலிருந்து ராமநாதபுரம் கோட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களது மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; பணிபுரிந்த கிராமத்தில் மீண்டும் பணியமர்த்த வேண்டும்; கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வெளியிடப்பட்ட அரசாணை மூலம் பதவி உயர்வை வழங்க வேண்டும்;
விரைவுப்பட்டா மாறுதல் அரசாணை எண்.210ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்; 2009-10ம் ஆண்டு நெற்பயிர் காப்பீடு தொடர்பாக பூக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 சதவீதம் தணிக்கைக்கு பிறகும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாலகிருஷ்ணன், முனியசாமி ஆகியோர் மீது துறை ரீதி நடவடிக்கை, குற்றவழக்கு பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்; கீழக்கரை வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா என்பவருக்கு 3 ஆண்டுகள் வருடாந்திர ஊதிய உயர்வை பிடித்தம் செய்யுமு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செய்தி: தினசரிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பெருக்க 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.500 கோடி நிதி!!
ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பெருக்க 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.500 கோடி நிதியை தமிழக
முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருப்பதாக மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா
திங்கள்கிழமை பேசினார்.
ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காரீப் முன்பருவ
கையேட்டினை வெளியிட்டு அவர் மேலும் பேசியதாவது:
தென்னை விவசாயத்தில் ராமநாதபுரம்
மாவட்டம் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் ஏராளமான
தொழில் நுட்பங்கள் இருந்தும் அவை சாதாரண விவசாயிகளை இன்னும் சென்றடைய வில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீராதாரத்தை பெருக்கி விவசாயம் செழிக்க வேண்டும்
என்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.500 கோடி நிதி ஒதுக்கி
5 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே சூரியஒளி
வெப்பம் குறையாமல் உள்ள மாவட்டம் ராமநாதபுரம். எனவே தான் கமுதியில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்ட ஆரம்பக் கட்டப் பணிகள்
தொடங்கியுள்ளன என்று அவர் பேசினார்.
விழாவுக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
ஆர்.ஹரிவாசன்,
நபார்டு வங்கி மேலாளர் சி.மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு.சுரேஷ்பாபு, கால்நடைத் துறை துணை இயக்குநர் மு.பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ஐ.சீகன்பால் வரவேற்றார். விழாவில் தோட்டக் கலைத்
துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன், மீன் வள உதவி இயக்குநர்
பிரதீப்குமார்,
தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் அ.செல்லத்துரை அப்துல்லா, வேளாண்மைத் துறை செயற்பொறியாளர் மு.யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் ம.சாந்தஷீலா நன்றி கூறினார்.
விழாவில் 40
ஆயிரம் விவசாயிகளின் செல்லிடப் பேசிகளுக்கு ஒலிவடிவ
குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் செய்தியையும் எம்.பி. அ.அன்வர்ராஜா
வெளியிட்டார். இதில் விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருள்களும் வழங்கப்பட்டன. வேளாண்
கருவிகள் தொடர்பான கண்காட்சியும் நடந்தது.
செய்தி: தினசரிகள்