முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 30, 2015

கீழக்கரை ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு!!

No comments :
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. 

இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும் 
தமுமுக - மமக நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தார்கள். 


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம், கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைக்க ரூபாய் பதினைந்து லட்சம் ஒதுக்கீடு!!

No comments :

ராமநாதபுரம் நகராட்சி கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கொழும்பு ஆலிம் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் மற்றும் கழிப்பறை அமைத்தல் பணிகளுக்காகராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2012 - 2013 ம் ஆண்டின் கீழ்
மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.15.00 பதினைந்து லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/1766/2012.
நாள் : - 13.08.2015
செயற்பொறியாளர் , பொதுப்பணித்துறை , கட்டட (க&ப) கோட்டம் , ராமநாதபுரம் , கடித எண், வப/இவஅ/கோ.111/2015/173M / நாள் : 31.07.2015.

செய்தி: இராமநாதபுர  MLA அலுவலகம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நீராதார நிலைகளிலுள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதங்களில் அகற்றப்படும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்கள் ஒரு மாதத்தில் பொதுப்பணித்துறையினரால் அகற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார். 

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஹரிவாசன், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் மதியழகன்  உள்ளிட்ட வேளாண்துறை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் 72 கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழாந்தூர் பாலகிருஷ்ணன், ‘‘கடந்த 2013-14ம் ஆண்டில் மழை பொய்து விவசாயம் இல்லாமல் போனது. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள புஞ்சை நிலங்களில் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தில் காட்டுக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

பரமக்குடி வட்டார விவசாயி கண்ணப்பன், ‘‘மூவாயிரம் ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிரிடப்படும் முண்டு(குண்டு) மிளகாய் சீஷனில் நாற்றுச்செடி கிடைக்காமல் அவதிப்படுகிறோம். நாற்றுச் செடிகளுக்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், ‘‘முண்டுமிளகாய் வேளாண்மைத் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை. சம்பா மிளகாய் நாற்று வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறோம்’’ என்றார்.
பெரியகண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலசுந்தரமூர்த்தி, ‘‘பெரியகண்மாய் மற்றும் வரத்துகால்வாய்கள் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கலெக்டர், ‘‘பொதுப்பணித்துறையினர் ஒரு மாதத்தில் ஆறுகள், கண்மாய்கள், வரத்துகால்வாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்களை அகற்ற உள்ளனர்’’ என்றார்.   களத்தாவூர் சுந்தர்ராஜன், ‘‘கமுதி தாலுகாவில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது’’ என்றார்.கலெக்டர், ‘‘நிலம் கையகப்படுத்துவதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை. தனிநபர், தனிநபர்களிடம் நிலத்தை வாங்குகிறார். இதில் அரசுக்கு சம்பந்தமில்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஆர்.எஸ்.மங்கலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் இட ஆக்கிரமிப்பு விவகாரம், 6 வார காலத்துக்குள் வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

No comments :
ஆர்.எஸ்.மங்கலத்திலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை தனியார் அபகரித்தது தொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை 6 வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள முகைதீன ஆண்டவர் பள்ளிவாசலுக்கு காலி இடத்தை, கடந்த 31.5.1999 இல் அப்போதைய பள்ளிவாசல் நிர்வாகி சீனிப்புலவர், அம்பலம் சீனிமுகம்மது, மல்லாரி முகைதீன் அபுபக்கர், பாவா பக்ருதீன் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்த ஷாஷகான் மனைவி மகபூபாவும் மற்றும் ராமநாதபுரம் பட்டினம்காத்தானைச் சேர்ந்த முகம்மது யூசுப் மனைவி சலிகா பீவியும் தானம் செய்துள்ளனர்.


அந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அப்துல் சுக்கூர் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த சீனிமுகம்மது மகன் அன்வர் (60) என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ராமநாதபுரம வக்பு வாரிய செயலருக்கும், திருவாடானை வட்டாசியருக்கும் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். 

எனவே அவர், மதுரை உயர் நீமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், 6 வார காலத்துக்குள் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சென்னை வக்பு வாரிய முதன்மைச் செயலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், திருவாடானை வட்டாட்சியருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)