Tuesday, September 1, 2015
கடலாடி தாலுகாவில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மாபெரும் அனல் மின் திட்டம் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது!!
தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ரூ.30,791 கோடி செலவில் ராமநாதபுரம், வடசென்னை, அரியலூர்,
கோவை ஆகிய இடங்களில் 4 புதிய மின் திட்டங்கள்
செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தாக்கல் செய்த அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாபெரும் அனல் மின் திட்டம் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இத்திட்டத்திற்குத் தேவையான சுமார் 3,000 ஏக்கர் நிலம் கொண்ட நல்லாம்பட்டி வருவாய் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
தேவையான திட்ட அனுமதிகளை பெற்ற பின் இம்மின் திட்டம் தொடங்கப்படும்.
மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 400 கிலோ வோல்ட் மற்றும் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வட சென்னையில் 765/400 கிலோ வோல்ட் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இந்த தொகுப்பு துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோ வோல்ட் புளியந்தோப்பு, துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும் எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்ற வழிவகை செய்யும்.
மேலும் அரியலூரில் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் 2121 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இந்தத் துணை மின் நிலையம் 765/400 கிலோ வோல்ட் திருவலம் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு வட சென்னை மற்றும்
எண்ணூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படவிருக்கும்
மின்சாரத்தை கடத்துவதற்கு துணை புரியும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 765/400 கிலோ வோல்ட் 2*1500
எம்.வி.ஏ. திறன் கொண்ட துணை மின் நிலையம் 2,335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இந்த துணை மின் நிலையம் அரியலூர் 765/400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 400 கிலோவோல்ட்
எடையார் பாளையம்,
ராசிப்பாளையம் துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு, கோவை,
சேலம் மற்றும் மேட்டூர் பகுதிகளின் மின் கட்டமைப்பை
வலுப்படுத்தும்.
மேற்காணும் அறிவிப்புகள் மூலம் தமிழகம் மின்சாரத்தில்
மின்மிகை மாநிலம் என்ற நிலையைப் பெறுவதோடு, தொழில் வளர்ச்சி
மேன்மையடைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்
செய்தி: ஒன் இண்டியா
செய்தி: ஒன் இண்டியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் கோவில் உண்டியல் திருட்டு, போலீஸ் விசாரணை!!
கீழக்கரை இந்து பஜாரில் அரியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலை நேற்று முன்தினம் இரவு 8.30
மணிக்கு பூசாரி கார்த்தி பூட்டிவிட்டுச்
சென்றுவிட்டார்.
நேற்று காலை அவர் கோயிலுக்கு சென்றபோது கதவின் பூட்டு
உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியல்
திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி ராஜாங்கம் கீழக்கரை போலீசில்
புகார் செய்தார். இந்த உண்டியலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களையும், பணத்தையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அதனால் உண்டியலில் லட்சக்கணக்கிலான மதிப்பில் திருடு போயிருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கீழக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
பனைக்குளம் பொன்குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தீ குளித்து தற்கொலை!!
பனைக்குளம் பொன்குளத்தை சேர்ந்தவர்
முருகன் மகன் செல்வம் என்ற முனீஸ்வரன்(35).
ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 28ம் தேதி குடித்துவிட்டு வந்துள்ளார். அவரை மனைவி
பானுப்பிரியா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி
தீ வைத்துக் கொண்டார்.
ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தேவிபட்டினம் எஸ்.ஐ., மலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் தொடரும் கொள்ளை சம்பவங்கள், லெட்சுமிபுரத்தில் வீட்டை உடைத்து கொள்ளை!!
கீழக்கரை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர்
ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவது மனைவி உத்தரம்மாள்
கடந்த 28ம் தேதி
குடும்பத்துடன் காஞ்சிரங்குடி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு உறவினர்
வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு
உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகை
மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம்
திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து உத்தரம்மாள் கீழக்கரை போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)