முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 3, 2015

ராமநாதபுரத்தில் செப்.9 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்.9 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் செப்.9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பவர்கள் தங்களின் சுய விவரக்குறிப்புடன் கூடிய விண்ணப்பம், மார்பளவு புகைப்படங்கள் 5 மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்களுடன் நேரில் ஆஜராகி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தனியார் துறை வேலையளிப்போர் தங்களுக்கு பயன்படும் விவரத்தினை ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செப். 5 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணியமர்த்தப்படுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின் படி பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்படுவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் செப். 8ஆம் தேதி மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரத்தில் செப். 8ஆம் தேதி மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் செப்.8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. 

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஆண், பெண் இருபாலருக்கும் இரு பிரிவுகளாக ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடைபெறும். இவற்றில் இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) ஜூனியர்ஸ் (தொடக்கப் பள்ளி முதல் 5 ஆம் வகுப்பு வரை) முதுநிலைப் பிரிவு (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) என போட்டிகள் நடத்தப்படும்.போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து சான்றிதழ் கொண்டு வந்து கொடுத்து போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 3 இடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)