Tuesday, September 8, 2015
உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கும் நபர்களுக்கான MBA படிப்பிறிகு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!
ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பு
படிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பணியில் இருக்கும் நபர்களுக்காக தொழில்நுட்ப
நிர்வாகத்தில் 2
ஆண்டு எம்பிஏ படிப்பாகும் இது.
இதுதவிர 3 வருட பகுதி நேர எம்பிஏ படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 3 வருட பகுதி நேர எம்பிஏ படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகள் மாலை நேரங்களில் மட்டும் நடைபெறும். இந்த
படிப்பில் சேர விரும்புவோர் இளநிலை பட்டப்படிப்பை உஸ்மேனியா பல்கலைக்கழகத்திலோ
அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ முடித்திருக்கவேண்டும்.
மேலும் வேலை பார்த்து வரும் நபர்கள், 2 வருடங்களுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும்
நபர்கள் நுழைவுத் தேர்வு மூலம் படிப்புக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். உஸ்மேனியா
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்கலை டவுன்லோட்
செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.,1,200க்கு டி.டி. எடுத்து
"The Director,
Directorate
of Admissions,
O.U.,
Hyderabad
"
என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். டி.டி.யை,
The
Director, Directorate of Admissions, O.U., Hyderabad " என்ற பெயரில் எடுக்கவேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி
செப்டம்பர் 28
ஆகும். நுழைவுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளமான http://www.osmania.ac.in/-ல் தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
10th +2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு தனித்தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!!
செப்., அக்., 2016 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள்
"தக்கல்'
திட்டத்தில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் மட்டும்
செப்.,
10, 11ல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
திருநெல்வேலி, மதுரை, கோவை,
திருச்சி, வேலூர், கடலூர்,
சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களில் தலைமையிடத்தில் தலா 2 தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வெழுத முடியும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் ரூ.125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500 மற்றும் ஆன்லைன் பதிவு
கட்டணம் ரூ.100
செலுத்த வேண்டும். "ஹால் டிக்கெட்'டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
செப்., அக்., 2016 பிளஸ் 2
துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள்
அரசு தேர்வு துறை சேவை மையங்களில் செப்., 9, 10ல் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம், இதர கட்டணங்களுடன்
சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000 மற்றும் ஆன்லைன் பதிவு
கட்டணம் ரூ.50
ஐ அரசுத்துறை தேர்வு மையத்தில் செலுத்த வேண்டும்.
"ஹால் டிக்கெட்'டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
"தக்கல்' திட்டத்தில் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் சென்னையில் மட்டுமே தேர்வு எழுத
முடியும், என ராமநாதபுரம்
முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)