முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 10, 2015

ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் மோசடி, 7 பேர் மீது வழக்குப்பதிவு!!

No comments :
ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே வாணி காரிக்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சௌக்கத் அலிகான் மனைவி ரோஷன்பீவி. இவர் உள்பட இவரோடு உடன்பிறந்தவர்கள் 6 பேரும் சேர்ந்து குடும்பச் சொத்தைப் சொத்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ரோஷன்பீவியிடம் ரூ.60 லட்சத்தை பெற்றுக்கொண்டு உடன் பிறந்தவர்களான ஜவஹர் பாத்திமா, அரபுநிஷா, செய்யது ஒலி, நாகூர் மீரா, புர்கானுதீன் ஆகிய 5 பேரும் சேர்ந்து சொத்தை கிரையம் எழுதிக் கொடுத்துள்ளனர். பின்னர் ரோஷன்பீவியும் அந்த இடத்தை வீட்டு மனைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.


இந்நிலையில் ரோஷன்பீவியின் உடன்பிறந்தவர்கள் 5 பேரும் சேர்ந்து ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், களஞ்சியம் ஆகிய இருவரின் உதவியுடன் அச்சொத்தை மீண்டும் ராமநாதபுரம் எஸ்.கே.நகரை சேர்ந்த பாஸ்கரனிடம் கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளனர்.

இத்தகவல் ரோஷன்பீவிக்கு தெரிய வரவும் அவர் ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனனிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள ரோஷன்பீவியின் உடன் பிறந்தவர்களையும், இரு தரகர்கள் உள்பட மொத்தம் 7 பேரையும் தேடி வருகின்றார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)