முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 15, 2015

IIT- Madras ல் Ph.D விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :

ஐஐடி மெட்ராஸில் பிஎச்.டி. படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மெட்ராஸ் ஐஐடி-யில் என்ஜினீயரிங், அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பிஎச்.டி. படிப்புகளில சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களாகும் இது.


எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்கள் என்ஜினீயரிங், தொழில்நுட்பப் பிரிவுகளில் பிஎச்.டி. சேரலாம். விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னர் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பிஎச்.டி. படிப்பில் சேர்கலாம்.

ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 4 ஆகும். நேர்முகத் தேர்வு, நுழைவுத் தேர்வில் ஆகியவை நவம்பர் 7 முதல் நவம்பர் 29-ம் தேதிக்குள்ளாக நடைபெறும்.


மேலும் விவரங்களுக்கு ஐஐடி மெட்ராஸின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://www.iitm.ac.in/-ல் தொடர்புகொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)