முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 16, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 10.82 லட்சம் பேர்!!

No comments :
  
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 10.82 லட்சம் பேர் இருப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் வெளியிட அதனை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன் பெற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகளாக பரமக்குடியில்-7,திருவாடானை-5, ராமநாதபுரம்-4 உள்பட 16 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளாக 1307 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே 1291 வாக்குச்சாவடிகள் இருந்தன. இவற்றோடு மேலும் 16 சேர்த்து மொத்தம் 1307 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பரமக்குடியில் 2,43,184 பேர்
திருவாடானையில் 2,66,459 பேர்
ராமநாதபுரத்தில் 2,79,195 பேர்
முதுகுளத்தூர் 2,93,664 பேர் 

என மாவட்டம் முழுவதும் 4 பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்களாக 10,82,502 பேர் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமையும், இம்மாதம் 30 ஆம் தேதியும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்படவுள்ளது. இம்மாதம் 20 ஆம் தேதியும், 30 ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கும், இறந்தவர்களையும், ஆட்சேபணைக்குரிய வாக்காளர்களை நீக்குவதற்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உள்பட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வட்டாட்சியர் தர்மர், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயமணி, திமுக நகர் செயலாளர் கார்மேகம், மாவட்ட செயலர் சுப.த.திவாகர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலர்.பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் அன்பு.பகுருதீன், அதிமுக ஒன்றிய செயலர் அசோக்குமார் ஆகியோர் உள்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

செப்.21ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செப்.21இல் நடக்க உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் சீமை கருவேலமரங்களை அகற்றும் கனவு உலகம் அறக்கட்டளை!!

No comments :


இப்பணியில் சகோதர இயக்கமாக செயல்படும் கனவு உலகம் அறக்கட்டளைக்கு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
தமிழ்நாடு.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)