முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Thursday, September 17, 2015

கீழக்கரையில் குடிநீர் குழாய் மாற்றும் பணி 70 சதவிகிதம் நிறைவு!!

No comments :
கீழக்கரையில் குடிநீர் குழாய் மாற்றும் பணி 70 சதவிகிதம் நிறைவு!!

கீழக்கரை நகராட்சி கமிஷனர் எஸ்.மருது கூறியதாவது:

கீழக்கரையின் 21 வார்டுகளிலும் கடந்த 1985 ல் போடப்பட்ட இரும்பிலான குடிநீர் குழாய்கள் 3 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அதன்பின், ரோடுகளின் உயரம் அதிகரித்ததால் குடிநீர் குழாய்கள் 8 அடி ஆழம் வரை சென்றுவிட்டது.


தற்போது சேதமடைந்தும், துருப்பிடித்தும் மீண்டும் பயன்படுத்தாத முடியாத நிலையில் இருந்த குழாய்களை, ஐ.யு.டி.எம்., திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்பத்திலான இரும்பு மற்றும் மண் கலவையில் ஆன குழாய்கள் மூலம் புதுப்பித்து சாலையோரம் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் கோயில்களில் அரசின் அன்னதானத்திட்டம் தொடக்கம்.!!

No comments :
ராமேசுவரம் திருக்கோயிலின் உப கோயில்கள் மற்றும் ராமநாதபுரம் தர்மதாவள விநாயகர் கோயிலில் அரசின் அன்னதானத்திட்டம்  செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

திருக்கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு அன்னதானம் திட்டத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிறு கோயில்களிலும் அன்னதானம் திட்டத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்பேரில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயில்களான நம்புநாயகி அம்மன்  மற்றும் லெட்சுமணன் தீர்த்தம் ஆகிய கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்க  நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இரு கோயில்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு   திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருக்கோயில் மேலாளர் லெட்சுமிமாலா, உதவிக்கோட்டபொறியாளர் மயில்வாகனன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் அலுவலர்கள் செல்லம், துரை மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் தர்மதாவள விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற நிரந்தர அன்னதானத் திட்ட தொடக்க விழாவுக்கு ஆயிரவைசிய மகாஜன சபைத் தலைவர் எம்.எஸ்.கேசவன் தலைமை வகித்தார். செயல் தலைவர் என்.ஏ.வாசுதேவன், கோயில் அறங்காவலர் ரவிக்குமார், ஆயிரவைசிய சபையின் பொதுச்செயலர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் தேவஸ்தான நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில் அன்னதானத்தை ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் எஸ்.சந்தானலெட்சுமி தொடக்கி வைத்தார். விழாவில் அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரேசுவரி, அரிமா சங்கத் தலைவர் ஆர்.வெங்கடாஜலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)