முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 27, 2015

இராமநாதபுரத்தில் இன்று( செப்-27) நல்ல மழை!!

No comments :
இராமநாதபுரத்தில் இன்று( செப்-27) நல்ல மழை பொழிந்தது. கடும் வெயிலில் வரண்டுகிடந்த நிலங்கள் நனைந்தன, மக்கள் மனம் மகிழ்ந்தன. தொடர்ச்சியான மழை வேண்டி மனங்கள் பிராத்தித்தன.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்)

No comments :
மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்).

இந்த வருடத்திற்கான 
இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டு பரஸ்பர அன்பைப்பகிர்ந்து கொண்டு பொழுதை இனிதே கழித்தனர்.

விளையாட்டுப்போட்டிகள், இரத்ததானம், உணவு “கார்னிவல்” ஆகிய்வை ஏற்பாடு செய்யப்பட்டு இனிதாக நடைபெற்றது விழா.செய்தி மற்றும் படங்கள்: திரு. அஸ்கர் அலி மற்றும் சித்தி நிஹாரா, மலேசியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கிருமி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (மதயானைக் கூட்டம்கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான்.

இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே கதை.
திரைக்கதையை இயக்குநர் அனு சரணும் காக்கா முட்டைஇயக்கு நர் மணிகண்டனும் சேர்ந்து எழுதியிருக் கிறார்கள். புதிய களமும் புதிய காட்சி களும் படத்தின் பலம். காவல் துறை இன்ஃபார்மர்களின் உலகம் தமிழ்த் திரையில் முதல் முறையாகக் காட்டப் படுகிறது.


காவல்துறையின் அழுக்கு களை அப்பட்டமாக்கியிருக்கிறது கிருமி. சட்ட விரோத நடவடிக்கை களுக்கு காவல்துறை அதிகாரிகள் துணைபோவது, துறைக்குள் நடக்கும் பனிப்போர்கள், துறைக்குள் நடக்கும் விசாரணை, இன்ஃபார்மர்களை அவர் கள் பயனபடுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை மிகவும் தத்ரூபமாகக் காட்டப்படுகின்றன. காவல் துறையின் சந்தர்ப்பவாதமும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

பாத்திர வார்ப்பில் இயக்குநர் மிக வும் கவனம் எடுத்துக்கொண்டிருக் கிறார். போலீஸாரின் குணநலன்களை அனுபவத்தால் அறிந்த காரணத்தால் அவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற நாசூக்கு பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கிறது. அளவாகப் பேசுகிறார். எல்லாவற்றிலும் நிதானம் காட்டுகிறார். இள ரத்தம் என்பதால் கதிருக்கு இந்த நிதானம் இல்லை. அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இரண்டு ஆய்வாளர் களின் இயல்பு, நடத்தை ஆகியவற்றி லும் இதே துல்லியம் வெளிப்படுகிறது.

ரெய்டு செய்த பிறகு சுந்தர பாண்டி யனுக்கும் மதியரசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடலும் உயர் அதிகாரி இவர்கள் இருவரிடமும் பேசும் வார்த்தைகளும் வசனத்தின் வலிமை யைப் பறைசாற்றுகின்றன. பிரபா கரன் குடும்பத்துக்கும் கதிர் குடும்பத் துக்குமிடையே இருக்கும் பந்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

பணம், அதிகாரம் என்று வரும்போது காவல்துறை, ரவுடிகளின் துணை கொண்ட நிழல் உலக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் யதார்த்தத்தைத் திரைக்கதை துல்லிய மாகக் காட்டிவிடுகிறது. இந்தக் கூட்டணி யைத் தனிநபர்களால் எதிர்கொள் ளவே முடியாது என்பதை உணர்த்தி விடுவதில் படம் நிஜ உலகுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் பொதுவாக நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இடங்களில் துளியும் சமரசமின்றி யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுப்பது பாராட்டத்தக்கது.

ஆனால், ஒதுங்கிப்போவது என்று தனிநபர் முடிவெடுத்தாலும் மற்றவர் கள் சும்மா விடுவார்களா என்ற கேள்வி யும் எழுகிறது. இந்த இடத்தில்தான் படம் பலவீனமாகத் தெரிகிறது. மிகைத் தன்மை அற்ற கிளைமாக்ஸ் துணிச்சலா னது. ஆனால் முழுமையானதல்ல.
துக்கிரித்தனமாக ஆட்டம்போடும் இளைஞர் பாத்திரத்தை முடிந்த அளவு நன்றாகக் கையாண்டிருக்கிறார் கதிர். தெனாவட்டான பேச்சு, காதல் குறும்பு, விடலைத்தனம், பொறுப்பான இன்ஃபார்மர், ரிஸ்க் எடுக்கும் இளமை வேகம் எனக் கச்சிதம் காட்டுகிறார்.

அவருடைய மனைவியாக வரும் ரேஷ்மி மேனன் அழகு. பெரிய வேலை யில்லை என்றபோதும் கிடைத்திருக் கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யிருக்கிறார். வெளியே கிளம்பும் நேரத் தில் வீட்டில் இருக்கும் கணவனின் மனம் அறிந்து தாமதமாகச் செல்ல முடிவெடுக் கும் சமயத்தில் அவர் முகத்தில் மலரும் புன்சிரிப்பு அழகிய கவிதை.
யோகி பாபு/அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்திரவாத மளிக்கின்றன. சார்லி, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.

கிருஷ்ணகுமாரின் இசை படத் தின் விறுவிறுப்புக்குத் துணை செய் கிறது. ஆனால் பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை. அருள் வின்சென் டின் ஒளிப்பதிவு காட்சிக்குத் தேவைப் படும் ஒளியையும் இருட்டையும் கோணத்தையும் தந்து நிறைவான உணர்வேற்படுத்துகிறது. காட்சிகளுக் கேற்ற வசனங்கள். வனிதா, தென்னரசு, மாரிமுத்து போன்றவர்களிடம் யதார்த்த நடிப்பு என படம் வழக்கமான படங்களிலிருந்து சிறிது தள்ளியே நிற்கிறது.

இயக்குநர் அனுசரண் முதல் படத்தில் தன் திறமையை நன்கு வெளிப் படுத்தியிருக்கிறார். அவரது முயற்சி யில் முழுமை கூடவில்லை என்றாலும், புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகவும் வலு வாகவும் கையாண்டிருக்கும் அவரை நம்பிக்கை தரும் இளம் இயக்குநர் களில் ஒருவர் என்று தயங்காமல் சொல்லலாம்.

விமர்சனம்: தி ஹிந்து
   

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் அதிகாரிகள் சமரசம்!!

No comments :
பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட பொதுமக்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்தனர். 
மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி ராமநாதபுரம் நகராட்சியையொட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்பட அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை. இதையடுத்து ஊராட்சி தலைவர் சித்ரா மருது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த ஊராட்சியின் கழிவுநீரை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச்சென்று நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நாகநாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் நீர்த்தேக்க தொட்டியில் கொட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பட்டணம்காத்தான் ஊராட்சி பணியாளர்கள் கழிவுநீரை எடுத்துக்சென்று கழிவுநீர்த்தேக்க தொட்டியில் கொட்டச்சென்றனர். அப்போது நாகநாதபுரம், இந்திராநகர் பகுதி மக்கள் கழிவுநீரை இங்கே கொட்டக்கூடாது என்றும், சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் கூறி திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் தர்மர், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ், நகரசபை உதவி பொறியாளர் சுப்பிரமணிபிரபு, என்ஜினியர் கருணாநிதி, சுகாதார ஆய்வாளர் அரிதாஸ், பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுகுறித்து பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது கூறியதாவது:- 

பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் சிறப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த மாவட்டத்தை சுகாதாரமாகவும், குப்பைகள் இல்லாத மாவட்டமாகவும், நோய்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் சுகாதாரமாக வாழ தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறார். 

கழிவுநீரை பொது இடங்களில் கொட்டினால் நோய் பரவும் என்பதற்காக நகராட்சி பகுதியான இந்திரா நகர், நாகநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் தேக்க தொட்டியில் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதி கழிவுநீரை கொட்ட அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கழிவுநீர் வாகனங்களை கழிவுநீர்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்திற்குள்ளே கொண்டு சென்று உடனுக்குடன் பம்ப் செய்து கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். .

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)