முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 10, 2015

ராமநாதபுரத்தில் 18ம் தேதி சூரியன் எப்எம் நடத்தும் வர்ணஜாலம் ஓவியப்போட்டி!!

No comments :

சூரியன் எப்எம் நடத்தும் வர்ணஜாலம் எனும் மாபெரும் ஓவியப்போட்டி ராமநாதபுரத்தில் 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.சன் குழுமத்தின் ஓர் அங்கமான சூரியன் எப்எம் மதுரை மக்களின் மனம் கவரும் நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் வழங்கி வருகிறது. அத்துடன் மக்களை தேடிச்சென்று பல போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்திநேயர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது. 
அந்த வகையில்ராமநாதபுரத்தில் முதல்முறையாக சூரியன் எப்எம்.மின் வர்ணஜாலம் எனும் மாபெரும் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. அக்.18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. காலை மணிக்கு தொடங்கும் போட்டியில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவிகள் பங்கேற்கலாம். 


போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் 9159935935 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் போட்டி தொடங்கும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிட வேண்டும். அனைவரும் பள்ளி சீருடை, அடையாள அட்டையுடன் வர வேண்டும். வரைவதற்கான வரைபடத்தாள் மட்டுமே வழங்கப்படும். தேவையான பிற பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். 

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் மஹாராஜா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் இன் தீபாவளி நிச்சயப்பரிசு காத்துக்கொண்டிருக்கிறது. வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு லைப் அண்ட் லிவிங் பர்னிச்சர்ஸ் பரிசு பொருட்களை வழங்குவர். 8ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்கள் பெற்றோர் அல்லது ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு வருவது நல்லது. 

சூரியன் எப்எம் நடத்தும் வர்ணஜால ஓவிய போட்டியை வழங்குவோர் ராமநாதபுரம் மஹாராஜா சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ். இணைந்து வழங்குவோர் ஏசியன் பில்டிங் மெட்ரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் லைப் அண்ட் லிவிங் பர்னிச்சர்ஸ், பாரதிநகர் ராமநாதபுரம். உடன் வழங்குவோர் ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, ஊடக தோழமையுடன் தினகரன் நாளிதழும் தமிழ்முரசு நாளிதழும், உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமான லையன் டிவி.யும் பங்கேற்கின்றனர்.

செய்தி: தினகரன்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணிக்கு கணினி இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணிக்கு பெல் நிறுவனத்தினரால் தற்காலிகமாக கணினி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புகைப்படம் எடுக்கும் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விரைவாக தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்களுக்கு ஆதார் கார்டு அவசியம் இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ரூ.5 வீதம் வழங்கப்படும். எனவே இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ்களுடன் உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


மேலும் விபரங்களுக்கு 96294 43133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அக்டோபர் 15, 16 தேதிகளில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது!!

No comments :
மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகள் அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளிலும் நடைபெற இருப்பதாக, ஆட்சியர் க. நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டுத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து, மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டிகளை நடத்துகின்றன.

இதை, அக்டோபர் 15 ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 16 ஆம் தேதி பள்ளி மாணவியருக்கும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகள், காலை 8 மணி முதல் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறும்.   6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டும் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கு பெறுவோர், பள்ளியில் படிப்பதற்கான சான்றை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வரவேண்டும்.  மேலும், பள்ளிச் சீருடையில் வரவேண்டும். இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும்.

முதல் 2 இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயர்களை, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் புது டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு நிதி ஆண்டில் (2015–16) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்கள் தொழில்புரிய கடன் வழங்கும் பொருட்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் தொழில் புரிவதற்காக, தனிநபர் கடன், சிறு வணிக கடன் மற்றும் மகளிர் குழு கடன் ஆகியவகைகளில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி பின்தங்கியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டமும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



எனவே இந்த வகுப்பை சேர்ந்தவர்கள், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும், தனிநபர் கடன், சிறு வணிகக்கடன் மற்றும் மகளிர் குழு கடன், ஆழ்குழாய் அமைப்பதற்கான மானியத்துடன் கூடிய கடன் ஆகியவற்றினை பெற உரிய விண்ணப்பத்தினை ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்று தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மேலும் விவரங்களை 99944 41257 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி, கீழக்கரை இளைஞர் கைது!!

No comments :
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 4 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்த கீழக்கரையைச் சேர்ந்த இளைஞரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அரைக்காசு ராவுத்தர் மகன் முகம்மது ஹனீபா. இவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீண் முத்துராஜ் ரூ. 1 லட்சமும் மற்றும் இவரது நண்பர்களான சரவணன் ரூ. 50 ஆயிரம், ராஜா மற்றும் ஜோதி ஆகியோர் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 3 லட்சத்தை கொடுத்துள்ளனர்.   

துபை மனிதவள மேம்பாட்டுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இந்த 4 பேரது பாஸ்போர்ட்களையும் பெற்றுக் கொண்டாராம். இந்நிலையில், வேலையும் வாங்கித் தராமல், பாஸ்போர்ட்களையும் திரும்பத் தராமல் முகம்மது ஹனீபா இழுத்தடித்துள்ளார்.


இது குறித்து பிரவீண் முத்துராஜ், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன் வழக்குப் பதிந்து, முகம்மது ஹனீபாவை கைது செய்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)