முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, October 18, 2015

மெட்ராஸ் ஐஐடி-யில் உதவித்தொகையுடன் PhD மற்றும் M.S படிப்புகள்!!

No comments :

மெட்ராஸ் ஐஐடி-யில் உதவித்தொகை வசதியுடன் பிஎச்.டி., எம்.எஸ். படிப்புகளை படிப்பதற்கான அருமையான சந்தர்ப்பம் மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

2016-ம் கல்வியாண்டில் தொடங்கவுள்ள படிப்புகளுக்கான உதவித்தொகைத் திட்டமாகும் இது. மெட்ராஸ் ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள் உதவித்தொகையைப் பெற வேண்டுமானால் அவர்கள் பி.இ., பி.டெக், எம்.எஸ்சி படிபப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் கேட், நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் முதல் 2 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இதைத் தொடர்ந்து 3-வது ஆண்டு வரை மாதம்தோறும் ரூ.28 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இதேபோல எம்.எஸ். படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். எம்.எஸ். படிப்பில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்புபவர்கள் கேட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் அவர்களது படிப்புத் தேர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு https://www.iitm.ac.in என்ற மெட்ராஸ் ஐஐடி-யின் இணையதளத்தைக் காணலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அதிமுக மா.செ திரு. ஆர்.தர்மருக்கு உற்சாக வரவேற்பு!!

No comments :
ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்று புதன்கிழமை பரமக்குடி வந்த ஆர்.தர்மருக்கு அக்கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கட்சிப்பணியாற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி. கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளை தலைமைக்கு எடுத்துக்கூறி தேவையான உதவிகளைச் செய்வேன்.

ஜெயலலிதா அரசின் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து பயணம் என 14 வகை நலத்திட்ட உதவிகள், பசுமை வீடுகள் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேரு நிதி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா கறவை மாடுகள், முதியோர் உதவித்தொகை, பட்டம் படித்த பெண்களுக்கு ரூ 50 ஆயிரத்துடன் தாலிக்குத் தங்கம், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், அம்மா உணவகம், சூரிய மின்சக்தி திட்டம், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் என இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் நிறைவேற்றாத எண்ணற்ற பல முன்னோடி திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து வீடுகளுக்கும் தொண்டர்களுடன் சென்று எடுத்துக்கூறுவேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளும் அதிமுகவுக்கு வெற்றித்தொகுதிகளாக மாற்றுவேன் என கூறினார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பெரியபட்டின இளைஞருக்கு அறிவால் வெட்டு, மூவர் கைது!!

No comments :

பெரியபட்டினம் பகுதியில் இளைஞரை அறிவாளால் வெட்டிய மூவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 பெரியபட்டினம் அகமதுஅலி நகரைச் சேர்ந்தவர் அகமது ரைசுதீன் (40). இவர் வியாழக்கிழமை இரவு தங்கையா நகர் பகுதி வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ரைசுதீனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பெரியபட்டினம் ஜலாலியாநகர் பகுதியைச் சேர்ந்த செய்யதுசாதிக், ரியாஸ்கான், தேவிபட்டினம்  பகுருதீன் ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர வணிக வளாகத்தில் தீ விபத்து, ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்!!

No comments :
ராமநாதபுரம் கைக்கொள்வார் தெருவில் உள்ள வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் சனிக்கிழமை அதிகாலையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருபவர் ரகுமத்துல்லா. இவர் வழக்கம் போல வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சென்று விட்டார். சனிக்கிழமை அதிகாலையில் கடை தீப்பிடித்து புகை வருவதை பார்த்த சிலர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.


தகவலறிந்து ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீயில் ரூ.5 லட்சம் அளவுக்கு பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் ரகுமத்துல்லாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)