முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 2, 2015

ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்பியாக திரு.மணிவண்ணன்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்பியாக திரு.மணிவண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி திரு.மயில்வாகனன் தஞ்சாவூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழகம் முழுவதும் 58 உயர் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாசுக் கடை வியாபாரிகள் சீனப் பட்டாசுகளை விற்பதில்லை என உறுதிமொழி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டாசுக் கடை வியாபாரிகள் சீனப் பட்டாசுகளை விற்பதில்லை என உறுதிமொழி எடுத்திருப்பதாக அச்சங்க செயலரான ஏ.வல்லபகணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை சில்லறை விற்பனை செய்வதற்காக அரசிடம் முறையாக அனுமதி பெற்று கடை நடத்தி வருகிறோம். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள சில ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு துணி வாங்கினால் ஒவ்வொரு நபருக்கும் பட்டாசுப் பெட்டிகளை இலவசமாக தருவதாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

இவையனைத்தும் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் என்று தெரிய வருகிறது. துணி வாங்குபவர்களுக்கு இலவசமாக பட்டாசுகளை கொடுக்கக் கூடாது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி மிகவும் தவறானது. அதிகாரிகள் முயற்சி எடுத்தால் அத்துணிக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்ய முடியும். மேலும் கடைக்காரர்கள் பாதுகாப்பு இல்லாமல் வெடி பாக்கெட்டுகளை துணிக் கடைகளில் அடுக்கி வைத்திருக்கின்றனர். இதுவும் சட்ட விரோதமானதாகும்.


இது குறித்து ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளிடம் சங்கத்தின் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி பெற்று பட்டாசு விற்கும் யாரும் சீனப் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மாவட்டத்தில் அரசின் உரிமம் பெற்ற எந்தக் கடையிலும் சீனப் பட்டாசுகள் விற்பனையிருக்காது என்றும் ஏ.வல்லபகணேசன் தெரிவித்தார்.


பேட்டியின் போது சங்கத் தலைவர் என்.வன்னியராஜன், பொருளாளர் ஆர்.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)