முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 8, 2015

இந்திய விமானப் படை (IAF) யில் வேலை வாய்ப்பு!!

No comments :
இந்திய விமானப் படையில் (IAF) கீழ்நிலை கிளார்க் (LDC) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது இந்திய விமானப்படை.

விளம்பரம் வெளியான 30 நாள்களுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கிலம், ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்கவேண்டும்.
வயது 18 முதல் 27-க்குள் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.

விண்ணபப்பங்களை சுய விலாசமிட்ட கவருடன் 5 ரூபாய் தபால் தலை ஓட்டி தகுந்த ஆவணங்களுடன் விண்ணபப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)