முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 17, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம், ஒருவர் உயிரிழப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடலோர பகுதியிலேயே அதிகஅளவில் பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பருமழையுடன் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை வழக்கமாக செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் மாத மத்தியில்தான் தொடங்கி வருகிறது. 

இதேபோல, இந்த ஆண்டும் அக்டோபர் 28-ந் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை கால வரையல் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) 
கமுதி-4, 
முதுகுளத்தூர்-1, 
பாம்பன்-22.08, 
பரமக்குடி-4, 
ராமநாதபுரம்-6.02, 
திருவாடானை-15, 
தொண்டி-16.03, 
பள்ளமோர்களம்-8, 
மண்டபம்-20.06, 
ராமேசுவரம்-40.02. 
தங்கச்சிமடம்-27.02, 
வட்டாணம்-15, 
தீர்த்தாண்டதானம்-17, 
ஆர்.எஸ்.மங்கலம்-10,
கடலாடி-2, 
வாலிநோக்கம்-1.04. 

மொத்த மழையளவு-208.27. 
சராசரி மழையளவு-13.02.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் நடுத்தெருவைச் சேர்ந்த குப்பு மகன் காளிதாஸ் (61). இவர் வீட்டில் இருந்த போது,மழையின் காரணமாக வீட்டுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் காயமைடந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருள்மிகு கன்னிகா பரமேசுவரி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட உள்ளது!!

No comments :
ராமநாதபுரம் அருள்மிகு கன்னிகா பரமேசுவரி அம்மன் கோயிலில் இம்மாதம் 25 ஆம் தேதி நட்சத்திரதார்களுக்கு ஏற்றவாறு லட்சதீபம் ஏற்றப்பட உள்ளது.


இதுகுறித்து ஸ்ரீகன்னிகா மகளிர் மன்ற தலைவர் பிரதா சிவக்குமார் கூறியது:

ராமநாதபுரம் வைசியாள் வீதியில் அருள்மிகு கன்னிகா பரமேசுவரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு திருவண்ணாமலை தீபத்தன்று நட்சத்திர லட்ச தீபாராதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நட்சத்திர லட்ச தீபாராதனை முடிந்ததும் மகா கார்த்திகை தீபமும், கோயில் வாசலில் சொக்கப்பனையும் ஏற்றப்படும். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும் என தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு!!

No comments :
கீழக்கரையில் பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கீழக்கரை பனியக்காரத் தெருவைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் மகன் அப்துல்ஹக்கீம்(52). இவர் தனது வீட்டில் மழைநீர் ஒழுகியதால் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 1-ம் தேதி முதல் அருகில் உள்ள சேரான் தெருவில் ஒரு வீட்டில் தாற்காலிகமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 

தினமும் தனது வீட்டிற்குச் சென்று சில மணி நேரம் இருந்து விட்டுச் செல்வார்.

இந்நிலையில் வழக்கம் போல் திங்கள்கிழமை நண்பகல் தனது சொந்த வீட்டிற்குச் சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல்ஹக்கீம் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது.

இது குறித்து அப்துல்ஹக்கீம் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)