முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 23, 2015

Indian Maritime University- ல் உதவிப் பணியாளர் வேலை வாய்ப்பு!!

No comments :
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் 13 உதவிப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 18-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

7 உதவிப் பதிவாளர், 6 உதவிப் பதிவாளர்(நிதி) என மொத்தம் 13 இடங்கள் காலியாகவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமும் அஞ்சல் மூலமும் அனுப்பலாம். தகுந்த சான்றிதழ்களை இணைத்திருப்பது அவசியம்.

டிசம்பர் 18 விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாகும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகமானது மத்திய பல்கலையாக செயல்பட்டு வருகிறது. இந்திய கடல்சார் பல்கலைக்கழகச் சட்டம் 2008-ன் படி இது மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சென்னை, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி, கண்ட்லா ஆகிய இடங்களில் பல்கலைக்கழக வளாகங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.imu.edu.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் பழுதடைந்துள்ள கட்டடங்களை இடிக்க கோரிக்கை!!

No comments :
கீழக்கரையில் பழுதடைந்துள்ள கட்டடங்களை அசம்பாவிதம் நிகழும் முன் இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கீழக்கரை நடுத்தெருவில் உள்ள மையப் பகுதியில் மிகவும் பழமையான சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையிலும், சுவரின் மற்றொரு பகுதி விரிசலடைந்து கீழே விழும் நிலையிலும் உள்ளது.

இப்போது மழைக் காலமாக இருப்பதால் எந்நேரமும் இந்த சுவர் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த சுற்றுச்சுவரை கடந்து செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.




எனவே இந்த சுற்றுச்சுவரை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோல் பழுதடைந்துள்ள மற்ற கட்டடங்களையும் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)