முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 7, 2015

விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புயல், மழை, வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோயினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. கடன்பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

கடன்பெறா சிறு, குறு விவசாயிகள் பிரீமிய தொகையில் 55 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

இதன்படி கடன்பெற சிறு, குறு விவசாயிகள் நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.135–ம், இதர விவசாயிகள் ரூ.149–ம் பிரீமியமாக செலுத்த வேண்டும். காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.14,904 வழங்கப்படும்.


விவசாயிகள் பிரீமிய தொகையை தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய வங்கிகளில் செலுத்தலாம்.

கூடுதல் பிரீமியம் செலுத்த விருப்பமுள்ள கடன் பெறாத விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.3,133–ம், கடன் பெறும் விவசாயிகள் ரூ.3,148–ம் பிரீமியமாக செலுத்தினால் இழப்பீட்டு தொகையாக ரூ.27,944 பெறலாம்.

பிரீமியம் செலுத்துவதற்காக கடைசி நாள் வருகிற 15–ந்தேதி. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு உச்சிப்புளி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)