முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 13, 2015

ராமேசுவரம் இளைஞர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டார்!!

No comments :

 ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் சோதனைச் சாவடியில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரை அவர்கள் நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் 5 கிலோ கஞ்சா போதைப்போருள் மற்றும் 7 செல்லிடப்பேசிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டியவர், ராமேசுவரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார்  (32) என்பதும், அவர் ஏற்கெனவே இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.
செல்வக்குமாரைக் கைது செய்த போலீஸார், கஞ்சா மற்றும் செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். அவரோடு கஞ்சா கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிர்றது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இம்மாதம் 21 ஆம் தேதி சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.


இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர் தலைமை வகிப்பார். 

எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!!

No comments :

ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த தமிழக இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, ராமேசுவரம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை தகவல் பலகையில் அச்சிட்டு பக்தர்கள் பார்வைக்கு வைக்க தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)