முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 22, 2015

எமனேஸ்வரம் தரைபாலம் இருள் நீங்குமா?!!

No comments :
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் தரைப் பாலத்தில் இரவு நேரங்களில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் பாலத்தில் அங்காங்கே பள்ளங்கள் காணப்படுவதால் மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது.


பரமக்குடியிலிருந்து தரைப்பாலம் வழியே எமனேஸ்வரம் வருகின்ற மக்கள் இருள் சூழ்ந்த மற்றும் பள்ளங்களில் மழைநீரிலும் நடைபோட வேண்டி இருப்பதால் பாதசாரிகள் மிகுந்த அவதியடைகின்றனர்.


ஆகவே பரமக்குடி நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தயவுகூர்ந்து எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் விளக்கு வசதியும், குண்டு-குழியுமான பள்ளத்தை சரி செய்து மக்களது அவதியை தீர்த்திட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தி: அ.சேக் அப்துல்லா,இராமநாதபுரம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு!!

No comments :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்டு வரும் வாகனங்களை இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமான வாகனங்கள் பழுதடைந்து உள்ளன.
பழுதான இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை இலவசமாக பழுது பார்க்க 200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, கடந்த 12-ம் தேதி இலவச பழுது பார்க்கும் முகாம்கள் தொடங்கின. சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், சூளை உள்பட 106 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இந்த சிறப்பு முகாம்கள் நேற்று நிறைவு அடைந்தன.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பழுது நீக்கும் முகாம்களை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, டி.வி.எஸ்., யமாஹா, என்ஃபீல்டு நிறுவனங்கள் மட்டும் பழுதுநீக்கும் முகாம்களை நீ்ட்டிக்க தற்போது ஒப்புதல் அளித்திருப்பதாகவும், மற்ற நிறுவனங்களிடம் அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மாநில தொழில்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்தி: விகடன்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

என்ஜினீயர்களுக்கு ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

No comments :
ரயில்வே கட்டுமான நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிபுரிய என்ஜினீயர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இர்கான் நிறுவனமானது 1956-ல் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கம்பெனி சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. முழுக்க முழுக்க மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமாகும் இது. ரயில்வே துறைக்குத் தேவையான கருவிகள், பொருட்களை உருவாக்கித் தருகிறது. ரயில்வே துறைக்குத் தேவையான கட்டுமானங்களையும் உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம்.இந்த நிறுவனத்தில் தற்போது மொத்தம் 30 காலியடங்கள் உருவாகியுள்ளன. உதவி மேலாளர், உதவி என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர், செக்ஷன் ஆபீஸர், உதவி ஆபீஸ் சூப்பிரடெண்ட், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். செய்த பின்னர் விண்ணப்பத்தின் மற்றொரு நகலை

Joint General Manager/ HRM,
Ircon International Limited,
C-4, District Centre, Saket,
New Delhi

என்ற முகவரிக்கு ஜனவரி 9-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும். கல்வித் தகுதி, வயதுத் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.ircon.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

இந்தியக் கடலோரக் காவல்படையில் கமாண்டண்ட் பணியிடங்கள், விண்ணப்பிக்க டிசம்பர் 25!!

No comments :
இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் என இரு பிரிவிலும் உதவி கமாண்டண்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.


இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு பி.இ., பிடெக் அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு 2 பிரிண்ட்-அவுட்டுகளை எடுத்து அதை தேர்வு மையத்தில் சமர்ப்பிக்கவேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 25 கடைசி நாள் ஆகும்.

வயதுத் தகுதி, கல்வித் தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்காக http://www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)