முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, December 25, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 போலீசாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை 15 பேரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ராமேசுவரம் நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், தங்கவேலு ஆகியோர் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய தலைமை காவலர் கிதியோன் நிலமோசடி தடுப்பு பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பஜார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் அர்ச்சுனன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், வாலிநோக்கம் போலீஸ் நிலைய தலைமை காவலர் குமார் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கும், தங்கச்சிமடம் தலைமை காவலர் முனியசாமி ராமேசுவரம் போக்குவரத்து காவல் பிரிவிற்கும், கேணிக்கரை தலைமை காவலர் மகேந்திரன் நிலமோசடி தடுப்பு பிரிவிற்கும், எஸ்.பி.பட்டினம் முதல் நிலை காவலர் முருகநாதன் கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்குபிரிவு

இதேபோல, ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது காசிம் கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு தலைமை காவலர் சந்திரசேகர் சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கும், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய தலைமை காவலர் சாலமோன் அப்பாத்துரை சத்திரக்குடி போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு முதல்நிலை காவலர் ராமச்சந்திரன் சாயல்குடிக்கும், மண்டபம் முதல்நிலை காவலர் பழனிராஜா சத்திரக்குடிக்கும், பாம்பன் தலைமை காவலர் முத்துமுனியசாமி சத்திரக்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கிடாரத்தில் புதிய பள்ளிவாசல் கட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் 20 பேர் மீது வழக்குப்பதிவு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரத்தில் புதிய பள்ளிவாசல் கட்டியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வாலிநோக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட வாலிநோக்கம் அருகேயுள்ள கீழக்கிடாரத்தில் புதிதாக பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது தொடர்பாக அக்கிராமத்தை முஸ்லிம்கள் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து வாலிநோக்கம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஜமாஅத் தலைவர் முகம்மது பாரூக்(54)தரப்பினர் 10 பேர் மீதும், எதிர் தரப்பில் அதே கிராமத்தை சேர்ந்த அகமது அப்பா(74) உள்ளிட்ட 10 பேர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி; தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: 

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த, தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


நீட்ஸ் என்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ. ஒரு கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிக் கடன் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பொதுப்பிரிவினராக இருந்தால் 35 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். வருமான வரம்பு ஏதுமில்லை. 
3 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அல்லது அதிக பட்சமாக ரூ. 25 லட்சம் மானியமும், 3 சதவிகிதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

தனிநபர், புதிய தொழில் முனைவோர், பங்குதாரர் நிறுவனங்களும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். நடப்பு நிதியாண்டிற்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 19 நபர்களுக்கு ரூ.190 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


எனவே, தொழில் தொடங்க விருப்பம் உள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம். இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)