(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 6, 2016

ராமநாதபுரத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் புறா பந்தயப் போட்டிகள் தொடக்கம்!!

No comments :
ராமநாதபுரம் ரேசிங் ஹோமர் கிளப் சார்பில், வரும் 9ஆம் தேதி முதல் புறா பந்தயப் போட்டிகள் தொடங்க இருப்பதாகவும், புறா வளர்ப்போர் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அதன் நிர்வாக இயக்குநர் ரமேஷ் மாரியப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது: சங்கத்தின் சார்பில் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கப்படும் இந்த புறா பந்தயத்தின் முதல் போட்டி, தாம்பரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கும், 2ஆவது போட்டி வரும் 17ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து ராமநாதபுரத்துக்கும் நடைபெறும்.அதேபோல், இம்மாதம் 31ஆம் தேதி ஓங்கோலிலிருந்து ராமநாதபுரத்துக்கும்,  பிப்ரவரி 12ஆம் தேதி விஜயவாடாவிலிருந்து ராமநாதபுரத்துக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இறுதிப் போட்டியாக, பிப்ரவரி 25ஆம் தேதி வாராங்கல் பகுதியிலிருந்து ராமநாதபுரத்துக்கு 1050 கி.மீ. தொலைவு புறா பந்தயப் போட்டி நடத்தப்பட உள்ளது.  முதல் பரிசை பெறும் புறாவுக்கு ரூ. 15 ஆயிரமும், 2ஆவது பரிசு ரூ. 8 ஆயிரமும், 3ஆவது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பந்தயத்திலும் குறிப்பிட்ட அளவு புறாக்கள் மட்டுமே பறக்கவிடப்படும் என்பதால், புறா வளர்ப்போர் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 94434-44192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment