(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, January 14, 2016

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் எருதுக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் எருதுக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கிராமப் பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான கிராமங்களில் எருதுக்கட்டு எனப்படும் மாடு பிடித்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

காளைமாட்டின் கழுத்தில் நீண்ட வடக் கயிற்றினைக் கட்டி, அதன் மற்றொரு பகுதியை ஒருவர் கையில் வைத்திருப்பார். காளை மாடு வயலில் வேகமாக  ஓடும் போது அதைப் பிடிப்பது எருதுகட்டு எனப்படுகிறது.

இதற்கு அனுமதி வழங்கிட வலியுறுத்தி ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடியில் உள்ள அய்யனார் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், எருதுக்கட்டு பேரவையின் மாவட்ட தலைவர் கே.ஆதித்தன் தலைமை வகித்தார். காஞ்சிரங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் வீரம்மாள் மற்றும் அன்வர் உள்பட மேலவலசை, கஸ்தூரிபுரம், காஞ்சிரங்குடி, கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் எருதுக்கட்டு விழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment