(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 6, 2016

கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட ஏர்வாடி முக்குரோடு, வள்ளல் சீதக்காதி சாலை, கடற்கரை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கீழக்கரை நகரின் பிரதான சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், கடைகளின் படிக்கட்டுகள், விளம்பர போர்டுகள் ஆகியன இடையூறாக இருந்து வந்தன. இதனால், பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் நகரம் திணறி வருகிறது.புகார்கள் எழுந்த நிலையில், கீழக்கரை உள்கோட்ட காவல் துணைக் கண்கானிப்பாளர் மகேஸ்வரி தலைமையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் கமலாபாய், ஆணையர் மருது, காவல் ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment