Monday, February 22, 2016
கீழக்கரையில் 19ம் தேதி நடக்கவிருந்த நகராட்ச துப்பரவு மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ரத்து !!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி டிராக்டர் (குப்பை வண்டி) ஓட்டுநராக பணிபுரிந்த அய்யப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது இடது கால் அகற்றப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. ‘மாற்றுத்திறனாளியான தன்னால் டிரைவர் பணியைச் செய்ய முடியாது என்பதால் மாற்றுப்பணி வழங்க வேண்டும்’ என நகராட்சித் தலைவர், ஆணையரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் மாற்றுப்பணி வழங்குவதாக கூறுவதாக புகார் எழுந்ததது.
இதுகுறித்து அய்யப்பன் ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் அளித்ததோடு தனக்கு மாற்றுப்பணியாக காலியாக உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் பணி வழங்க வேண்டும் என்றும் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்..
இதன் செய்தி எதிரொலியாக கடந்த 19ம் தேதி நடைபெற இருந்த துப்புரவு மேற்பார்வையாளர் பணிக்கான நேர்முக தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தகவல் பலகையில் சுற்றறிக்கை ஒட்டப்பட்டுள்ளது.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment