(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 17, 2016

பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து, 2 பெண்கள் உயிரிழப்பு, 19 பேர் காயம்!!

No comments :
பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். குழந்தை உட்பட 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று மாலை 5 மணிக்கு "ஒன் டூ ஒன்' அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி செம்மண் ஏற்றிய டிப்பர் லாரி சென்றது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மரிச்சுக்கட்டியில் சென்ற போது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விக்கிரமபாண்டிய புரத்தைச் சேர்ந்த சண்முகவேலு மனைவி மருதாயி, 60, வாலி நோக்கம் அருகே கீழக்கடாரத்தைச் சேர்ந்த ஆண்டி மனைவி லட்சுமி, 30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.பஸ் டிரைவர் நடராஜன், 45, கண்டக்டர் அனந்தநாராயணன், 56, திருமூர்த்தி மகள் அனிதா, 3, மதுரை கோமதி, 68, ராமநாதபுரம் இந்திரா, 33, கீழக்கடாரம் மாரியம்மாள், 56, பிச்சை, 40, முருகன், 47, குண சேகரன், 23, லாரி டிரைவர் உடை குளம் ராஜூ ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டனர்.

ராமநாதபுரம் துணை தாசில்தார்(தேர்தல்) சுரேஷ்குமார், 44 உட்பட 5 பேர் லேசான காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்திற்கு 108 மற்றும் அனைத்து தனியார் ஆம்புலன்ஸ்களும் விரைந்து சென்று காயமடைந்த வர்களை மீட்டு மருத்துவ மனைகளில் சேர்த்தனர். கலெக்டர் நடராஜன், சப்-கலெக்டர் சமீரன் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பரமக்குடி தாசில்தார் செய்யதுமுகம்மது, டி.எஸ்.பி. பொன்னரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த விபத்தால் மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

காயமடைந்த மாரியம்மாள் கூறியதாவது: கீழக்கிடாரத்தைச் சேர்ந்த நாங்கள் 6 பேர் அரசு பஸ்சில் ராமநாதபுரத்துக்கு சென்று கொண்டிருந்தோம். எதிரே வந்த லாரி மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது பஸ் மீது மோதியது. பின்னர் அனைவரின் அலறல் சப்தம் மட்டும் கேட்டது. என்னுடன் வந்த உறவினர் லட்சுமி பலியானார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment