(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 20, 2016

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி!!

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு எந்திரம்
ராமநாதபுரம் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலுள்ள சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான பரமக்குடியில் 301 வாக்குச்சாவடி மையங்களும், திருவாடானையில் 321, ராமநாதபுரத்தில் 321, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 364 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,307 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக1,674 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 2,500 கட்டுப்பாட்டு கருவிகள் பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, ராமநாதபுரத்திலுள்ள தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூட சேமிப்பு கிட்டங்கியில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுஉள்ளது. ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் திருவாடானை ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பெல் நிறுவன பொறியாளர்கள் மேற்பார்வையில் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முதல் கட்ட பரிசோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வருகிற 24–ந்தேதி வரை முதல்கட்ட பரிசோதனை செய்யவும், அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதி ஒருவரை அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியை விரைந்து முடித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களிடம் வழங்க அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், தேர்தல் தாசில்தார் சுகுமாறன் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment