(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 28, 2016

ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் சர்வதேசத்தர ஆக்கி மைதானத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.


ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும்உட்கட்டமைப்பு இடை நிரப்பு நிதியில் இருந்து ரூ.கோடியே 57 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும்திட்ட சேமிப்பு மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.51 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு தன்னிறைவு திட்டத்தில் வேலுமாணிக்கம் நிறுவனங்களின் சார்பில் ரூ.50 லட்சமும்செய்யதம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.35 லட்சமும்மாவட்ட ஆக்கி சங்கத்தின் சார்பில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரமும்டாக்டர் கனகமணி அரவிந்தராஜ் ரூ.10 லட்சமும்சென்னை கால்பந்து கழகம் ரூ.லட்சமும் பங்களிப்பாக வழங்கி உள்ளனர். 




இந்த ஆக்கி விளையாட்டு மைதானத்தை நேற்று காலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர், அன்வர்ராஜா எம்.பி, மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், ராம்கோ தலைவர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, நகர் செயலாளர் அங்குச்சாமி, நகரசபை தலைவர் சந்தானலெட்சுமி, வேலுமாணிக்கம் நிறுவனங்களின் தலைவர் மனோகரன், ஆக்கி சங்க மாநில செயலாளர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், அ.தி.மு.க. தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் பழனி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா மாளிகை 

முன்னதாக, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் சுமார் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தையும், ராமேசுவரத்தில் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment