(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 28, 2016

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான        ww‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப உறை மீது சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உறுப்பினர், செயலர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
116-, ஈவேரா பெரியார் நெடுஞ்சாலை
நேரு பூங்கா
சென்னை-600084 

என்ற முகவரிக்கு வரும் 10.4.2016-க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கவேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எஸ்.டி.ஏ.டி. சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், ராமநாதபுரம், தொலைபேசி-0456-7230238, செல்லிடப்பேசி 74017-03452 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment