(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 9, 2016

மாமன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் முழு உருவ வெண்கலச்சிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் நிறுவப்பட்ட மாமன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் முழு உருவ வெண்கலச்சிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாமன்னராகத் திகழ்ந்த ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, நாட்டு விடுதலைக்காக போராடி 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, சிறையிலேயே மரணம் அடைந்தவர். ராமேசுவரம் கோயிலில் உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தை கட்டி முடித்தவரும் இவராவார். இவரது 8 அடி உயர முழுஉருவ வெண்கலச்சிலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பாக நிறுவப்பட்டிருந்தது.



இச்சிலையை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். இதையடுத்து சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.அன்வர்ராஜா, ராமநாதபுரம் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த குமரன் சேதுபதி, முதுகுளத்தூர் நிலவள வங்கியின் தலைவர் ஆர்.தர்மர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.சி.ஆணிமுத்து, புதுமலர் பிரபாகரன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செயலாளர் ஆ.ஆடலரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ராமருது, நூர்முகம்மது மற்றும் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment