(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 12, 2016

அறிவியல் கண்காட்சி ரயில் ராமேசுவரம் வருகை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்!!

No comments :
அறிவியல் கண்காட்சி ரயில் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்து சேர்ந்ததையடுத்து, இதை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் இணைந்து இயக்கி வரும் அறிவியல் கண்காட்சி ரயில் வேலூர், கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்து சேர்ந்தது. இது சனிக்கிழமை (மார்ச் 12) வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு இங்கு நிறுத்தப்பட்டிருக்கும்.



இதை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம். வியாழக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

விக்ரம் சாராபாய் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள், கண்காட்சி பார்வையாளர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவ கால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பற்றிய தகவல்களை விளக்குகின்றனர்.

இதை, பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் திட்ட அலுவலர் முத்துக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாடிக்ட் (ராமநாதபுரம்), தீனதயாளன் (பரமக்குடி) ஆகியோர் செய்துள்ளனர். இந்த ரயில் 12 ஆம் தேதிக்குப் பின் திருநெல்வேலி செல்லும் என்றும், அங்கு 4 நாள்கள் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் பசுமைப்படை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment