Thursday, March 31, 2016
ராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.68 லட்சம்!!
ராமேசுவரம் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து
எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.68 லட்சத்துக்கு மேல்
கிடைத்திருந்தது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களை திறந்து
எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும், இந்து அறநிலையத் துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ரோசாலிசுமைதா, ஆய்வர் சுந்தரேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட
வெளிநாட்டுப் பணம் உள்பட ரொக்கமாக 68 லட்சத்து 30 ஆயிரத்து 124
ரூபாயும், 95 கிராம் தங்கமும், 4 கிலோ 110
கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது.
இப்பணியில், கோயில் உதவிக் கோட்டப்
பொறியாளர் மயில்வாகனன்,
கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரீன்ராஜ்,
பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,
ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள்
மற்றும் கோயில் அலுவலர்கள்,
பணியாளர்கள் ஈடுபட்டனர்.
செய்தி:
தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment