(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 17, 2016

திருப்புல்லாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!!

No comments :
திருப்புல்லாணி ஆதிஜெக நாதபெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.


ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதிஜெகநாதபெருமாள் திருக்கோவில். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட புகழ்வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிபட்டம் நான்கு ரதவீதிகளில் வந்தது

நிகழ்ச்சியையொட்டி கோவில் குருக்கள் நாலாயிர திவ்யபிரபந்தம் பாடல்களை பாடினர். இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவையொட்டி வருகிற 24-ந்தேதி வரை மண்டகப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில், சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஸ்கார் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


இதேபோல ராமநாதபுரத்தை அடுத்துள்ள வளநாடு அருகே உள்ள கருப்ப பிள்ளைமடம் கிராமத்தில் அமைந்துள்ள குமரக்கடவுள் சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. 

விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி கொண்டனர்.

நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பாலநமசிவாயம், சண்முகநாதன், சண்முகசுந்தரம் உள்பட ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment