(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 4, 2016

காங்கிரஸ் க்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்தது திமுக கூட்டணி, SDPI நிலை என்ன?

No comments :
திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 180 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது.

திமுக கூட்டணியில்,

காங்கிரஸ் -41
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 5
மனித நேய மக்கள் கட்சி-5
சமூக சமத்துவ படை கட்சி- 1
விவசாய தொழிலாளர் கட்சி-1
பெருந்தலைவர் மக்கள் கட்சி-1

என மொத்தம் 54 தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சியும் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.



இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்றார். இதனடிப்படையில் எஞ்சிய 180 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றிருந்தது. இதற்கு முன்னர் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 202 இடங்களில் திமுக போட்டியிட்டு 150 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில்தான் வென்றது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment