(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 9, 2016

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ள 5 தொகுதிகள்!!

No comments :
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ள 5 தொகுதிகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தலைவர் காதர் மொய்தீன் சந்தித்தார். அப்போது இரு கட்சிகள் நடுவே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

வாணியம்பாடி,
கடையநல்லூர்,
விழுப்புரம்,
பூம்புகார்,
மணப்பாறை

ஆகிய ஐந்து தொகுதிகளில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுவதற்கான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது குறித்து காதர்மொய்தீனிடம் நிருபர்கள் கேட்டபோது, "எந்த ஒரு கட்சியையும், கூட்டணியில் இணைத்துக்கொள்ள முடிவெடுத்த பிறகு, அந்த கட்சியை தாங்களாகவே வெளியே அனுப்பிய வரலாறு திமுகவுக்கு கிடையாது. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் போட்டியிட விரும்பாவிட்டால் அவர்களாக வெளியே செல்வதுதான் வரலாறு. இப்போதும் அதுதான் நடந்துள்ளது என்றார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment