(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 10, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் மே, 10-11 தேதிகளில் நடக்கிறது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் இன்றும்(மே 10), நாளையும்(மே 11) நடக்கிறது.

கலெக்டர் நடராஜன் கூறியதாவது,

ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட 6,347 பணியாளர்களுக்கு தபால் ஓட்டு பதிவிற்கான சிறப்பு முகாம் இன்றும் ( மே 10), நாளையும்(மே 11) நடக்கிறது.

இதுவரை தபால் ஓட்டு பதிவு செய்யாத அலுவலர்கள் தங்களுக்கு எந்த தொகுதியில் ஓட்டு உள்ளதோ, அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திற்கு சென்று ஓட்டு பதிவு செய்து கொள்ளலாம்.



ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்,
திருவாடானை தொகுதி வாக்காளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திலும், பரமக்குடி தொகுதி வாக்காளர்கள் பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்திலும்,
முதுகுளத்துõர் தொகுதி வாக்காளர்கள் முதுகுளத்துõர் தாலுகா அலுவலகத்திலும் நடக்கும் சிறப்பு முகாம்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்யலாம்.

மே 7ல் நடந்த பயிற்சி வகுப்பில் தபால் ஓட்டு சீட்டு பெற்றுக்கொண்டோர் இரண்டு நாள் சிறப்பு முகாமில் ஓட்டு சீட்டு உறையை அந்தந்த தொகுதிக்குரிய பெட்டிகளில் போடலாம்என்றார்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment