(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 12, 2016

கீழக்கரையில் அதிமுக வாக்கு சேகரிப்பில் மந்தநிலை!!

No comments :
கீழக்கரையில் அதிமுக நிர்வாகிகளின் கோஷ்டி பூசலால், வாக்கு சேகரிப்பில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் மணிகண்டன் போட்டியிடுகிறார். அதிமுக.வில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலால் வாக்கு சேரிப்பில் மந்த நிலையில் உள்ளது. கீழக்கரையில் தற்போதைய அதிமுக நகர் செயலாளர் ஒரு கோஷ்டியாகவும் சேர்மனின் கணவர் தனி கோஷ்டியாகவும்முன்னாள் அதிமுக உதவி சேர்மன் ஒரு கோஷ்டியாகவும்அம்மா பேரவை செயலாளர் தனி கோஷ்டியாகவும் என 5க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் இருப்பதாக தெரிகிறது. 



தற்போது இதில் அதிமுக நகர் செயலாளர் மட்டுமே ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபடுகின்றார். ஆனால் இவர்களின் செலவுகளுக்கு எதிர் கோஷ்டியிடமே பணம் கேட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அதிமுக வாக்கு சேகரிப்பு பணியில் மந்தநிலை உள்ளது.மேலும் கூட்டணி கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியில் போதுமான தொண்டர்கள் இல்லாததால் வேட்பாளர்களுடன் மட்டுமே இவர்கள் வாக்கு சேகரிக்க செல்கின்றனர். வேட்பாளரும் 2 முறை மட்டுமே கீழக்கரைக்கு வந்துள்ளதால் அதிமுக தொண்டர்களும் உற்சாகம் இழந்து காணப்பட்டு வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக வின் ஊழியர் கூட்டம் நடந்தபோது கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கீழக்கரையில் ஓட்டுஎண்ணிக்கை கூடா விட்டால் நகர் நிர்வாகிகள் அனைவரையும் பொறுப்பில் இருந்து நீக்கிநடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா கூறினார். இந்நிலையில்தற்போது நகர் செயலாளர் அணியினர் மட்டுமே ஒரு சில நிர்வாகிகளை வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment