(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 24, 2016

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்துவிட்டதால், பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 4ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் புதிய குடும்ப அட்டை மனுக்கள், நகல் குடும்ப அட்டை மனுக்கள், அச்சடித்து பெறப்பட்ட புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைகள், ரேஷன் கார்டில் பெயர் நீக்கல், சேர்த்தல நடைபெறாது என பொதுவிநியோக திட்ட உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவித்திருந்தார்.  

தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு 20ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பங்கள் மற்றும் பெயர்நீக்கம், பெயர் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்கும், குடும்ப அட்டை தொடர்பான பணிகளுக்கும் விண்ணப்பங்கள் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment