(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 4, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,00,971 வாக்காளர்கள்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 11,00,971 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து
ஆண் வாக்காளர்கள் 550780 பேர்,
பெண் வாக்காளர்கள் 5,50,119 பேர்,
மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர்

என மொத்தம் 11,00,971 வாக்காளர்கள் உள்ளனர்.  


இதற்கு முன்பு வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 11,00,194 வாக்காளர்கள் இருந்தனர். முன்பு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 777 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், ராமநாதபுரம் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன்,அரசியல் கட்சிப் பிரமுகர்கள் செந்தில்குமார் (அதிமுக), அன்பு பகுருதீன்(தேசிய வாத காங்கிரஸ்), முருகேசன் (காங்கிரஸ்), ஹெச்.ஜான்சௌந்தர்ராஜ் (மதிமுக), காந்தி மற்றும் குமார் (பா.ஜ.க), சுப.தி.திவாகரன் (திமுக)ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment