வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, September 10, 2016

ராமநாதபுர மாவட்டத்தில் ஒன்றரை மாதத்துக்கு 144 தடை!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஒன்றரை மாதத்துக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினமும், அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியும் நடைபெறுகிறது.


இதையொட்டி பொது அமைதியை காக்கும் வகையில் 144 நடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில்,

இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக். 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

செப்டம்பர் 9 முதல் 15ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31ம் தேதி வரை வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment