(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 4, 2016

மருத்துவச் சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம், அதிகாரி கைது!!

No comments :

ராமநாதபுரத்தில் மருத்துவச் சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சுகாதாரத்துறை ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள எருமைக்குளத்தில் வசிக்கும் கணபதியின் மகன் பாலமுருகன் (24). பெயிண்டரான இவர் தனக்கு மாற்றுத் திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குமாறு ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.


அங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் ரா.ராமகிருஷ்ணன் (50), சான்றிதழ் கொடுக்க ரூ.3000 லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவில், பாலமுருகன் புகார் அளித்தார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள சுகாதாரப் பணிகள் துறை அலுவலகத்தில், ராமகிருஷ்ணன் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment