(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 29, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 799 பேர் வேட்பு மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 799 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய 3ஆவது நாளான புதன்கிழமை
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 பேரும்,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் 170க்கு 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 429 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு இதுவரை
139 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்தம் 3,075 பேருக்கு இதுவுரை 616 பேரும், நகர்மன்ற உறுப்பினர் 111 பேருக்கு இதுவரை இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 108 பேருக்கு இதுவரை 22 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மொத்தம் 3,910 பதவிகளுக்கு கடந்த 3 நாள்களில் மட்டும் 799 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment