(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 10, 2016

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11–ந் தேதி) இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. விழாவையொட்டி மாவட்ட காவல்துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இந்த ஏற்பாடுகளையும், பதற்றமான பகுதிகளில் உள்ள வழித்தடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ராமநாதபுரத்தில் கூறியதாவது:– 

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மாவட்ட காவல் துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 .ஜிக்கள், 3 டி..ஜிக்கள், 15 போலீஸ் சூப்பிரண்டுகள், 17 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 22 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5,000–த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போலீஸ் உயர்அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுஉள்ளது. இந்த உயர்அதிகாரிகளின் கீழ் 30 தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவை சேர்ந்த போலீசார் மற்றும் 7 ஆயுதப்படை பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு முதன்முறையாக பரமக்குடி பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களின் பார்வையின்கீழ் கொண்டுவரப்பட்டுஉள்ளது.


இதற்காக பல்வேறு பகுதிகளில் 30 சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர வான்வெளியில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. 18 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். உரிய அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே சோதனை சாவடியை கடந்து செல்ல முடியும்.
பரமக்குடி பகுதி முழுவதும் இருசக்கர வாகனங்களிலும், 4 சக்கர வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் 24 மணி நேர ரோந்து சுற்றிவர சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மீண்டும் அவர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். நிகழ்ச்சியையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விதிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment