Saturday, September 10, 2016
உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு!!
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்.
தேர்தலையொட்டி ராமநாதபுரம் நகராட்சியில் 70 வாக்குச்சாவடிகளும், பரமக்குடியில் 78,
கீழக்கரையில் 33,
ராமேசுவரத்தில் 35 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல பேரூராட்சிகளில் மண்டபத்தில் 18,
தொண்டியில் 17,
ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி ஆகியவற்றில் தலா 15 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரத்தில் 124,
திருப்புல்லாணியில் 139,
மண்டபத்தில் 188,
ஆர்.எஸ்.மங்கலத்தில் 148,
திருவாடானையில் 183,
பரமக்குடியில் 145,
போகலூரில் 94,
நயினார்கோவிலில் 118,
முதுகுளத்தூரில் 178,
கமுதியில் 206,
கடலாடியில் 258
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,107
வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 2011
உள்ளாட்சி தேர்தலைவிட தற்போது கூடுதலாக 65 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment